×

2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளி வேலைநாட்கள் 216; விடுமுறை நாட்கள் 150 என அறிவிப்பு

சென்னை: 2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளி வேலைநாட்கள் 216 வேலைநாட்கள் 150 என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் தொடங்கும். 2024 மார்ச் 18ல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கும்.

பள்ளிகள் திறந்தவுடன் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் 2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளி வேலையாட்கள் 216 வேலைநாட்கள் 150 என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-24ம் கல்வியாண்டிற்கான 3 பருவத்தேர்வுகள் நடக்கும் நாட்கள்,விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டது.

முதல் பருவத்தேர்வு செப்டம்பர்.14 முதல் 27 வரை நடக்கும்,செப்டம்பர்.28 முதல் அக்டோபர்.2 வரை 5 நாட்கள் விடுமுறை. இரண்டாம் பருவத்தேர்வு டிசம்பர்.11 முதல் 22 வரை நடக்கிறது, டிசம்பர்.23 முதல் ஜனவரி 1 வரை 10 நாட்கள் விடுமுறை. மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல் 18 முதல் 30 வரை நடக்கிறது. அடுத்தாண்டு பள்ளியின் கடைசிவேலைநாள் ஏப்ரல் 30. 2023-24கல்வியாண்டில் மே 1 முதல் மே 31 வரை 31 நாட்கள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளி வேலைநாட்கள் 216; விடுமுறை நாட்கள் 150 என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...